Thursday, November 28, 2019

மாற்றம் !!!???

Pratilipi link :

https://tamil.pratilipi.com/story/9qazgecyqlb0?utm_source=android&utm_campaign=content_share


1950ல் இருந்து இப்போது வரை ... என்ன மாறியிருக்கிறது ? பெரிய அளவு மாற்றத்தை விடுங்க. At least நம்ம வீட்ல, என்னென்ன மாற்றம் வந்துருக்கு ?

என்னனவோ மாறிருக்கு. என்ன மாறவே இல்ல ? நான் பாத்த மனுஷங்க, எங்க ஊர்ப்பக்கம் இருக்க பழக்கவழக்கங்கள் - இத வச்சு சொல்றேன்.

1950 - 1970கள்

எங்க அம்மா பெத்த தாத்தாவுக்கு 5 பொண்ணு. ஒரே ஒரு பையன்.மொத பொண்ணுக்கும் பையனுக்கும் வயசு வித்தியாசம் 20. அந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம் தான். ஆனா இங்க, வாரிசு வேணும்னு, கோவில் கோவிலா ஏறி, அழுது வேண்டி வரிசையா பொண்ணுங்க. சரியான மருத்துவ வசதிகள் இல்லாம, இடைல 3 குழந்தைங்க இறந்துருக்காங்க (அதுல 2 பொண்ணு, 1 பையன். ஆக மொத்தம் எட்டு). "கல(12) மக்க பெத்தாதான் பொம்பள" ங்கறது famous ஆன பழமொழி. அப்பவும் பாருங்க, பொம்பள தான். ஆம்பளைக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்ல. வாரிசு பொறந்ததும் நெறைய சொந்தக்காரங்க வீட்டுக்கு வரதை நிறுத்திட்டாங்கன்னு அம்மா சொல்வாங்க. வாரிசு இல்லனா, சொத்தை ஆட்டையப் போட்ருவோம்னு சுத்துற கூட்டமாம் !!!

இதே மாதிரி வேற வேற version குடும்பங்கள் இருக்கு. எல்லாத்துலயும் என்னனா, பையன் தான் வாரிசு. பொண்ணுனா அடுத்த வீட்டுக்குப் போறவங்க. ஒரு படி மேல சொல்லணும்னா, பொண்ண கட்டிக் குடுக்கும் போது (ஏன்னா, பொண்ணு மாடு அல்லது அனைத்து அஃறினை மாதிரி. தவிடு புண்ணாக்கு போட்டு வளத்து அடிமாட்டுக்கு அனுப்புற கத தான்), rules இருக்கு.

1. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன். (கல், புல் கூட அதுபாட்டுக்கு அமைதியா இருக்கும. குடிச்சுட்டு வந்து அடிக்காது)
2. என்ன ஆனாலும், வாழாவெட்டியா ( பேரப் பாருங்களேன். என்னமோ கல்யாணத்துக்கு முன்னாடி வாழாம இருந்தமாதிரி) வந்துராத. உன்னக் கட்டிக் காப்பாத்த எங்களால முடியாது.
3. "எம் மக தப்புப் பண்ணா வெட்டிக்கூட போடுங்க. நான் என்னனு கேக்க மாட்டேன்". இந்த வரிகள நான் நேர்லயே கேட்ருக்கேன். அந்த தப்புங்கற list ல சோத்துல உப்பு போடாத கேஸெல்லாம் சேருமான்னு தெரியல. By the way, சோத்துல உப்பு அதிகமா போடுறான்னு அத்து விட்ட (அதாங்க divorce in கட்டப்பஞ்சாயத்து) சனம் ஒண்ணும் ஊர்ல உண்டு.
இன்னும் நெறைய ...

இப்ப நெறைய வேலைக்கு போற பெண்கள் நகர்ப்புறத்துல. படிப்புக்கு முக்கியத்துவம் அதிகமான காலம். ஆனாலும் என்ன நடந்துச்சு ? எங்க வீட்டுக் கதையவே சொல்றேன். எங்கம்மாக்கு first பொண்ணு. அப்பா வீட்டு சனம் ஒருத்தரும் வரலையாம். அந்தப் பொண்ணு கொஞ்ச நாள் ல இறக்க, அடுத்த வருஷம் நான். 30 நாள் முடிஞ்சு, பேர் வைக்கனும் ங்கற எண்ணம் கூட யாருக்கும் இல்ல. அம்மா சண்ட போட்டு, அதுக்கப்பறம் ஏதோ பேருக்கு குலுக்குச் சீட்டுப் போட பூசாரியக் கூட்டிவந்துருக்காங்க. அவ்வளவு தான். ஏன் இம்புட்டுக் கோவம்னா, எங்க பெரியப்பாவுக்கும் ஒரு பொண்ணு. அதுக்கடுத்து சித்தப்பா கல்யாணம் பண்ணி, 2 பொண்ணு. கேக்கவா வேணும்? இருக்கற எல்லா ஜோசியக்காரனையும் புடிச்சு, ஏதோ பழைய சாபம் அது இதுன்னு பரிகாரம் செஞ்சு, சித்தப்பாவுக்கு ஒரு பையன்.
ஆக, படிப்பு வாசனை அதிகமாகியும், இந்த வாரிசு பிரச்சனை ஓயல.

2000 க்கு மேல்

இப்போ இதெல்லாம் இல்ல. இந்தியா எவ்வளவோ முன்னேறிடுச்சு. அப்படின்னு தான் நானும் நம்பிட்டு இருந்தேன்.
எனக்கு first ஒரு பொண்ணு. 2வது தாய்மைன்னு தெரிஞ்சதுமே, எல்லாரும் சொன்னது....

"Wish u have a boy baby now"
"ஒரு பையனப் பெத்துப் போடு. உங்க வீட்டுக்கு மொத வாரிசு" (கணவர், வீட்டுல தலப்பிள்ள).

ஏற்கனவே ஒரு பொண்ணுங்கறதால, இப்போ ஒரு பையன் வேணும்னு சொன்னா சரி. ஆனா இந்த வாரிசு matter இன்னும் இருக்கு. இதுல advice வேற."பொண்ணு பொறந்துட்டா கவலப் படக்கூடாது. ஆண்டவன் குடுக்குறத ஏத்துக்கணும்".(அடப்பாவிங்களா... !!!)

And climax... எனக்கு ரெண்டாவது பொண்ணு :-D

இப்போ, அந்த "பையனப் பெத்துப்போடு" கும்பல் என்ன சொன்னாங்க... ?!

I am disappointed ... (பரவால்ல open ஆ சொல்லிட்டாங்க. எவ்வளவோ மேல்)

"கடவுள் ஆசி வேணும்னா ஆண் குழந்தை. அந்தக் கடவுளே வேணும்னா பெண் குழந்தை". ஒரு பொக்கைவாய் பாப்பா படம் போட்டு, Whatsapp ல ஒரு picture. (அட, அதுக்குள்ள இப்படி மாத்திட்டாய்ங்களே !!!)

" பொண்ணு தான் மகாலட்சுமி.. "(பணம் இருந்தா தான் மதிப்புன்னு design பண்ணிருக்காங்க. நன்றி)

" பொண்ணு தான் நம்மள கடசி வரக் காப்பாத்தும். பையன் பொண்டாட்டி பேச்சக் கேட்டுட்டுப் போய்டுவான்" (இந்த mentality என்ன வகைன்னே தெரில. அவரு அப்பா அம்மாவ கவனிக்கல போல.. )

இது தான் highlight ஆன comment.

நெருங்கின சொந்தம்(பெண்) .. "எனக்காக ஒண்ணு பண்ணுவியா? ரெண்டும் பொண்ணு. ரெண்டாவது பொண்ண பையன் மாதிரி வளக்கணும்.pant shirt ஆ வாங்கிக் குடு. பையன் மாதிரி தைரியமா போட்டுக்கு போடு போடற மாதிரி வளக்கணும்"
சுர்ருன்னு வந்த கோவத்துல கேட்டேன். "அது ஏன்? 2 பையன் இருக்கற வீட்டுல, பொண்ணுக்கு ஆசப்பட்டா, maximum பையனுக்கு பொண்ணு dress போட்டு போட்டோ எடுக்குறீங்க. ஏன் ஒருத்தன frock வாங்கிக் குடுத்து பொண்ணாவே(அதாவது, உங்க உலக நியதிப்படி, வளத்து, கல்யாணம்ங்கற பேர்ல, நீ வேற குடும்பம்னு சொல்லி வெளியேத்தனும்) வளக்க வேண்டியது தான ? சரி, நீங்க சொல்ற மாதிரி, எம்பொண்ண பையன் மாதிரி வளக்குறேன். கல்யாணம் பண்ணா மாப்பிள்ளை இங்க வரணும். வீட்டு வேலையெல்லாம் செய்யனும். ஏற்பாடு பண்ணுவீங்களா ?" பதிலக் காணோம். ஆக, பெண்களுக்கே, ஆண் உசத்தி, பெண் அசிங்கம் ங்கற எண்ணம் இருக்கு.

இன்னும் எத்தன வருஷத்துக்கு இப்படி? 2 பையன் இருந்தாலும் இப்போல்லாம் இதே மாதிரி "அய்யயோ" க்கள் இருக்கு. ஆனா, அதுக்கு சொல்ற காரணம் "வாரிசு" காரணம் மாதிரி வாழ்க்கை முழுசுக்கும் தொடரும் காட்டம் இல்ல.

இது உடலமைப்பு. அந்தந்தப் பிறவிக்காக முடிவானது. அவ்வளவுதான். அந்த வெளித்தோற்றத்த வச்சு, குணத்தை, பழக்கவழக்கத்தை, அந்தஸ்தை, செய்ய வேண்டிய செயல்களை, அல்லது, செய்யக் கூடாத செயல்களை முடிவு பண்ணும் வேலை இங்க யாருக்கும் இல்ல. பிறக்கற குழந்தைய நல்ல மனிதனாக வளக்கணும் அப்படிங்கற எண்ணம் மட்டும் இருந்தாப் போதும்.

பெண்களுக்கு இருக்கற தாழ்வு மனப்பான்மை, ஏற்கனெவே இருக்கற ஏற்றத்தாழ்வு, ஆணை விட உசத்தியா ஆகணும்னு நினைச்சு, எதிர்ப்பக்க ஏற்றத்தாழ்வுக்குப் போற நிலம, தற்கொலைகள், வரதட்சணை, பெண் சிசு கொலை(இப்போ இல்லைன்னுலாம் சொல்ல முடியாது. பாலின ஏற்றத்தாழ்வு இங்க இருக்கு -(நன்றி : டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் முகநூல் பதிவு) - இது எல்லாத்துக்கும் "வாரிசு" எதிர்பார்க்கும் நீங்களும் ஒரு மறைமுக/நேர் காரணம்.

பெண்களே..
ஆண்களிடமிருந்து மாற்றத்தை எதிர்பார்க்கவோ, வற்புறுத்தும் முன்போ, சிந்தியுங்கள். நீங்களும் சமம் தான். உங்களை மதியுங்கள். உங்கள் உடனிருக்கும் பெண்களை மதியுங்கள். குழந்தைகளுக்கு, சமநிலை சொல்லித்தாருங்கள். அதன்பின்பான மாற்றங்கள் தானாக நிகழும் !!!


Friday, May 3, 2019

கண்டனென் கற்பினுக்கு அணியை !!!

கண்டனென் கற்பினுக்கு அணியை

Effective communication – Email Etiquettes – short and simple – 7 C’s of communication etc. We have come across a lot of “communication” topics. 


The essence is “Tell what you want to say in the first 2 lines. Detailed explanation can follow then!!!”.
One such beautiful, clear, concise verse in “Kambaramayanam” – Thamizh Epic (Written by Thamizh poet Kamban, 12th century) never fails to mesmerize.


சீதையைத் தேடிச் செல்கிறான் அனுமான். இராமனோ இங்கு பதட்டத்தில். பல காத தூரம் சென்று, வென்று வரும் அனுமான். இங்கு இல்லாளைப் பிரிந்து தவிக்கும் இராமன் !


[Hanuman has gone in search of Sita. Anxious Rama waits for Hanuman’s arrival, with a good news about Sita. Hanuman reaches Lanka, finds Sita. He reaches back to the restless Rama.]


வழக்கம் போல இராமனை வணங்கி, பாதம் பற்றி, ஆலிங்கனம் செய்து, "நான் இங்கிருந்து புறப்பட்டேனா? ... சென்று கொண்டே இருந்தேன் !!!", என கதையளந்திருக்கலாம். ஆனால் அனுமன் என்ன செய்தான்? சமுத்திரத்தை நோக்கி, தென் திசை பார்த்து வணங்குகிறான். இராமனுக்கு பாதி துயரம் குறைந்தது. அனுமன் சீதை இருக்குமிடம் அறிந்தான் எனக் கண்டு கொண்டான். சீதை நலமோடு உள்ளாள் - இராமன் ஐயம் தீர்ந்தது.


[As a practice, Hanuman could have conveyed his wish to Rama and then he could have started, “I started from here, and do you know what happened on the way? Etc.” But he did not. He turned towards the ocean at the South, raised his hands and paid his salutation. Rama got rid of his major reason for worrying. “Sita is alive and fine. Path to her existence is this ocean”.]


எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல் தன்
மொய்கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கை கொடு
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.



விளக்கங்கள் கேட்டு இராமன் வாய் திறக்கும் முன் அனுமன் உரைக்கிறான்.


[Before Rama asks any question, Hanuman tells,]


“கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண்திரை அலை கடல் இலங்கைத் தென்நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.”



"நான் கண்களால் கண்டேன். கற்பினுக்குப் பெருமை சேர்க்கும் அணியை! இலங்கை மாநகரில். கவலை களையுங்கள்!".


[I met Sita. She is alive, with her chastity not disturbed. And she is in Lanka which is surrounded by the ocean.]


அனுமன் "சொல்லின் செல்வன்" அல்லவா !!!


[No wonder Hanuman is praised as “Sollin Selvan” – meaning, the one with a wealth of words. ]
 

Saturday, November 17, 2018

Chekka Chivantha Vaanam - Ponniyin Selvan !!!


*CCV – Chekka Chivantha Vaanam
*PS – Ponniyin Selvan

Chekka Chivantha Vaanam - As I said in my previous blog, it's a “Rasool report”. I read through few blogs, listened few videos. There are too many things to notice in this testosterone high movie (As said by Siva Ananth, co-writer of the movie). Hope almost all wonders of the magician Mani were thoroughly analyzed already.

Few said that it is inspired from the Korean movie “New world”. It is totally unfair to comment on this without watching the Korean movie. Hence no comments. But, I felt a strong resemblance of the epic “Ponniyin Selvan”, throughout the movie. That may be wrong, yet, this is to register why I felt the resemblance.

CCV plot is not that of PS. I did not feel it is an exact copy of the physical characters or scenes in PS, but the soul, emotional, mental characteristics of the PS characters are crushed, taken out, transformed to the contemporary style and rendered out in a grand manner, portraying the male dominance, the animal inside each and every one.



This is the life of the ageing don – Senapathi, his wife Lakshmi.

Needless to tell, it reminded of King Sundhara Cholar. As a king there, as a don here!!! Powerful. A King’s life is always transparent to the people - Senapathi’s house is covered with glasses such that all floors can be seen from outside.

Senapathi’s 3 sons – Varadarajan, Thiyagarajan, Ethirajan.

In PS, we have 3 successors who are eligible for the throne – Aadhitha Karikalan, Arulmozhivarmar, Madhuranthakan.

Mani usually shows the opposite versions or the contemporary versions of the epic characters, as in Raavanan. Same way I felt here too. In PS, all are good and charming in their own way, but here it is the beauty of the evil inside every one.

PS’ Characteristics in CCV’s Characters:

Varadan, Chithra, Parvathi



Aadhitha Karikalan, Sundhara Cholar’s eldest son, has conquered Pandiyans in his younger age. Aadhitha Karikalan found the absconded Pandiyan king, slaughtered him and hung his head in front of Tanjore palace. He was the most commanding and he is crowned as the prince of the Chola Kingdom.

Varadan is the first son of Senapathi. He is into his father’s way from the beginning, stays closer to his father. He is powerful as Senapathi in their circle.

Aadhitha Karikalan is too powerful and audacious but he is cranky. He is always in a dilemma, in a guilty feeling. He has both good and evil running in his mind, but ultimately he is acquitted in understanding the shrewd people around him.

Varadan’s intro – It is more like he is speaking to his conscience. And remember the conversation between Thyagu and Ethi at Dubai? That describes the rest. Ethi – “Pathiya, intha puthisaalithanam than Varadan ta kidaiyathu. Ithuve avana iruntha katti pidichu santhoshapatrupan.

Aadhitha Karikalan feels his power only when he is in Kanchi. Although he is the prince, he does not want to be in the capital city, as there are so many sharing the power in an indirect way.

Though Varadan is the important person, Senapathi holds the power. In all the scenes, it is revealed that Varadan craves for the power more than Thyagu and Ethi. He feels his power only in Aditi Rao’s home. Varadan - “Anga Periyavar thaan ellam. Anga irukura 35 allungalla nanum oruthan. Aana inga naan than ore oru Raja.

There is no scene where Aadhitha Karikalan and Kundhavai are conversing (except a flashback story telling). But, throughout the book, we feel the emotional relationship between them. He respects her, he seeks help from her for all the disturbances he has. Her intelligent sister is his courage. Kundhavai, understanding the upcoming disasters, sends Vanthiyathevan to be with Karikalan, to go with him wherever he goes. Karikalan makes himself alone when he goes to Nandhini, and, at last he loses his courage to face Nandhini.

Varadan’s courage is Chithra. She is honest, forthright, tough, intelligent, bold. She tries hard to save Varadan. She asks Rasool to stay with Varadan. At the same time, she recognizes that she can save him to a little extent only. She comprehends his nature yet follows him everywhere. When Varadan loses Chithra, that is the end of him that he predicted very well before.

Thyagu, Renu



Arulmozhivarmar (Ponniyin Selvan), the most handsome, the second son of Sundhara Cholar has never dreamt of Chola throne, as there is already a cold war between Aadhitha Karikalan and Madhuranthakan. But he has dreamt big – not for a small region like Chola kingdom, but for a vast region.

Whenever Thyagu is shown to be in Dubai, he is in a ship, that reminds of Sri Lanka, an Island. Renu is a Srilankan. More than Varadan and Ethi, Thyagu is sculpted stylish in all the frames. Thyagu – “Santhoshama irukken. Renu, pullainga, en business. Happy.

Arulmozhivarmar is not interested in destruction, but concentrates in construction of the country where he is. There is a detailed comparison in PS part 2, of how the war field looks like after Aadhitha Karikalan conquers vs Arulmozhivarmar conquers. When Aadhitha Karikalan conquered Pandiyans and interested in extending Chola Kingdom to the North India, whereas Kodumbalur Paranthaka Vellar has died in Sri Lankan war, the intelligent Arulmozhi starts to Sri Lanka.

Paid attention to Thyagu’s conversation with the Sheiks at Dubai (Thyagu introduction)? Thyagu – “It is not one pipeline. It is a network from Kazakhstan all the way to China. And we have access to 7 blocks”. He is concerned about development (Listen to Thyagu’s words to the goons). “Na dubaikaran. Dubai potta paalavanama irunthathu. Onnum valarathu. Thanni illa. Oil illa. Ethuvum illa. Aana ipo? Intha 25 varushathula enga poirukku parunga.

Arulmozhi conquers Sri Lanka. He developed the Island. Usually, the vanquishers destroy the seized land and the soldiers loot everything and utilize the wealth. When they happened to stay for a longer period as they were searching the escaped King, the food materials for the soldiers were sent from Chola kingdom. Aadhitha Karikalan had a vengeance on this as those were the saved materials for his future invasion on North India.

For Thyagu’s business, funding is from Senapathi account and Varadan stops it. Throughout the movie, he is frustrated as the business runs from Senapathi’s fund.

Arulmozhi is a blend of courage, majesty, intelligence, kindness and every good quality. He showers his love on family members, not like Aadhitha Karikalan, who is not good in expressing his feelings.

Thyagu is always shown near to Senapathi or Lakshmi. In the hospital, he sits near Senapathi. He helps Lakshmi to remove her head bandage. He spends time with his family. He shows the physical closeness towards his family members.

Pazhuvettaraiyar sends men to Srilanka. Poonguzhali, the boat girl overhears that the men are there to arrest Arulmozhi and take him to Tanjore. She takes this strange message to him. Poonguzhali – courageous, naughty, interesting, has a ‘don’t care’ attitude, nowhere related to the king clan, has an interest on Arulmozhi. When the tides change, she understands the glitches of being in a king’s family and detaches her interest.

Renu (in a small boat) visits Thyagu (in ship) to inform him the violence on Senapathi and Lakshmi (Just notice her attitude!!!). And that lift scene. Renu seems upset hearing the family conversation. When she handles the thugs, “Enakku epdiyada theriyum. Neenga enga poring nu pondatimarunga ta sollita poreeyal?”.

Ethi



After Rajathithyar, his younger brother Kandarathithyar got the throne, but he was fascinated towards spirituality and handed over the throne to the other younger brother Arinjayar. Arinjayar dies within a year and his son Sundhara cholar becomes the King. In a later point of time, Kandarathithyar got married to a like-minded princess(Sembiyanmaadhevi), they gave birth to Madhuranthakan around the same time Aadhitha Karikalan was born. Madhuranthakan was raised up as a spiritual person but he developed liking the throne due to the stimulus of few lords in Chola Kingdom.

Ethi is Senapathi’s third son, but he is shown as an unwanted person by the family. On hearing the attack on Senapathi, he reacts “Na varanuma??!!”. He stays far from his father in hospital, triggers the discussion on who is the next successor.

Madhuranthakan hides himself in a palanquin and intrigues with Pazhuvettaraiyar and other kings. He, raised up as a “Sivathondan”, falls as prey to hatch plots against Aadhitha Karikalan. He is close to his mom but everything changes as he involves in conspiracy.

Ethi is involved in unlawful activities. He is doubted for the conspiracy. Varadan and Thyagu are in the opinion that his deeds will pull everyone to danger.

History tells that, Uthama Cholan (Mathuranthakan) becomes the King after Sundara Cholar. In PS, we have different plots in understanding who is the actual Uthama Cholar. At the end, Mathuranthakan, when he comes to know that he is not the actual son of Sembiyanmaadhevi, he pleads to her. He begs her to be with him so that none will know the truth and abandon him. (Yeah, I know, you understand a little. All I can tell is to read the book !! :-) )

Ethi joins hand with Thyagu and plans a plot against Varadan. It is to support Thyagu. At last he begs his mom to be with him, when his mom lost faith on him.

The Chola kingdom is so vast and there are so many clans and lords and their generations supporting the King. The major forces among them are

Pazhuvur clan, Malayaman clan, Kodumbaalur clan.

Pazhuvur lords have been supporting Cholas for more than 100 years. Thirukovilur Malayaman’s daughter is now, Sundara Cholar’s wife. Kodumbalur Periya velan has fought for Cholas and left his body during early Srilankan war. His daughter Vaanathi, resides with Kundhavai and she is to marry Arulmozhi. His brother Kodambalur Poothivikramakesari proceeds to Srilanka along with Arulmozhi and does wonders.  In the present, Lords of Pazhuvur (Periya Pazhuvettarayar – Treasurer, Chinna Pazhuvettarayar – The police (Kottai Kaaval)) and others support Mathuranthakan. Thirukovilur Malayaman supports his elder grandson Aadhitha Karikalan. Kodambalur Poothivikramakesari stands with Arulmozhi.
In part 5, all 3 supporters march towards the capital and are ready to start a war. Who wins is the rest.

In CCV, three clans are stuffed as 3 sons themselves.

Rasool



Ok. PS lovers – waiting for the most interesting characters? Here they are.

Vanthiyathevan

This young man, who leads the entire story, the most favorite hero of mine belongs to Vaanavaraiyar clan. They have lost to Cholas several decades ago. He remains the best friend of Aadhitha Karikalan. He takes a message from Aadhitha Karikalan to Sundara cholar and Kundhavai. He overhears the secret meeting of conspiracy. Kundhavai writes to her beloved brother in Srilanka, asks Vanthiyathevan to carry the message and bring her brother back. Then follows his adventures. He remains loyal to the Chola kingdom, befriends Arulmozhi, Mathuranthakan, wins the heart of Kundhavai, ready to spare his life to save Aadhitha Karikalan. He gets too many chances to be against Chola, but he never does.

Nandhini

Nandhini is a fictional character. Aadhitha Karikalan, in his younger days, falls in love with her. This love is forbidden by Sembiyanmaadhevi, Karikalan accepts this but could not forget Nandhini. The elder lord of Pazhuvur marries young Nandhini after he was past the age of sixty-five. Her seems to have some mysterious past and she has a deal in plotting against Chola Kingdom. Later the mystery is revealed (The question “Who is Nandhini?” remains hypothetical. This seems to be the most correct among all the assumptions) –  Her father is the Pandiyan king, and her mother is a dumb lady who gives birth to twin babies (One among them is Nandhini) at Sembiyanmaadhevi’s palace. She leaves the children and jumps from top of the light house. Her sister takes care of the kids. Nandhini plans for a revenge and remains the powerful villain in the story.

What if Vanthiyathevan used his chances to plot against Chola King? Then the transformation would result in a Nandhini.



Hope, now everything is clear. In CCV, the 2 characters are blended as Rasool. The meaning for “Rasool” is “Messenger”. He is the best friend of Varadan, helps Varadan. He has a special respect and interest towards Chithra. Chithra – “En Kalyanam Kattala?”, Rasool – “Ungalukku thangachi illa, nan kalyanam kattala…”. Rasool’s father Ibrahim is a gangster and is shot in encounter, in front of him and his mom. His mom gives him to her sister and commits suicide. Here, Senapathi is not related to the encounter, but Rasool starts hating gangsters after his father is encountered.

And who is Aniruththa Brahmaraayar in CCV?!?! Who else other than Mani !!!!



Saturday, October 6, 2018

அம்மன்குடி





அம்மன்குடி

ஐந்தாம் வகுப்பில் ஆரம்பித்தது கல்கி படைப்புக்கள் மீதான காதல். அன்றுதொட்டு, வந்தியத்தேவன் செல்லும் வழியெல்லாம் பிரயாணப்பட ஆசை. பாண்டிய தேசத்தோடு சேர தேசம் இணையுமிடத்தைப் பூர்வீகமாகக் கொண்டதனால், சோழ தேசம், பரிகாரங்களுக்கு வரும் இடமாகவே எனக்கு இருந்தது. ஒரு வரலாற்றுப் பயணம் செல்லும் பாக்கியம் ஏனோ இதுவரை அமையவில்லை. ஆனால், சோழ தேசத்துக் கணவன் வாய்க்கப் பெற்றேன்.

கல்கி படைப்புக்கள் தவிர, சோழ தேசம் பற்றி, வேறு புத்தகங்கள் படிக்க ஆசை கொண்டு ஆரம்பித்தது "உடையார்". மற்ற நூல்கள் தேடிப் போகிறது என் பயணம்.

உடையார், மக்கள் வரலாறு, மக்களோடு இயைந்து, இணைந்து, சோழதேசம் வளர்த்த இராஜ இராஜனின் கம்பீரக் காவியம்.

படித்ததுமே, பார்க்க வேண்டிய இடங்களைப் பட்டியலிட்டேன். என்னே அதிசயம்!!! அதில் பாதிக்குமேல் , என் கணவரின் பூர்வீக கிராமத்தின் அருகிலேயே உள்ளது.
இனிமேல் அங்கு செல்கையிலெல்லாம், ஒவ்வொரு இடங்களாகப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதிபூண்டாயிற்று.

முதலில் அமண்குடி(தற்போது, அம்மன்குடி). கும்பகோணத்திலிருந்து 14.8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அம்மன்குடி.




 தேவி துர்கை, மகிஷாசுரனை வதம் செய்துவிட்டு, தனது சூலத்தை, அம்மன்குடி நதியில் சுத்தம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. பாப விமோசன தீர்த்தம் கொண்ட இக்கோவிலுக்கு நாங்கள் சென்றது மாலை வேளையில்.

கோவில் பழங்காலத் தோற்றம் கொள்ளாது, சமீபத்தில் பல மாறுதலுக்குள்ளாகி குடமுழுக்கு நடத்தப் பட்டது போல் தோற்றமளித்தது.  தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான திருக்கோவில்களில் இதுவும் ஒன்று.






இராஜ இராஜ சோழனின் முதன் மந்திரி கிருஷ்ணன்ராமன் பிரம்மராயரின் சொந்த ஊர்


           

     


கி.பி. 5ம் நூற்றாண்டில் கோச்செங்கணன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. 944 கி.பி.-ல் கட்டப்பட்டதாகவும்
எழுதியிருக்கிறார்கள். அதாவது, தஞ்சை பெரிய கோவில் கட்டும் முன்னரே இங்கு ஒரு துர்கை அம்மன் கோவில் உள்ளது.

உடையாரில், பாலகுமாரன் வாயிலாக கிருஷ்ணன்ராமன் கூறுகிறார் - "என்னுடைய ஊரான அமண்குடியில், அரசரின் பெயரால், அரசனுக்குப் பிடித்த சிவனுக்கென்று ஒரு கோயில் நான் நிச்சயம் எழுப்புவேன். அருகில் பாலதிரிபுரசுந்தரியை ஸ்தாபிப்பேன்....  ஆதிகேசவா, சிவன் கோயில் மட்டுமல்லாது அஷ்ட தச புஜ துர்க்கைக்கும் ஒரு சந்நிதி ஏற்படுத்தி, என் ஊர்மக்கள் வழிபடும்படி நான் செய்வேன்..."

அப்படியெனில், 944ம் ஆண்டு அங்கு துர்கை அம்மன் கோவில் இருந்திருக்கிறது ஆனால் அஷ்ட தச புஜங்க துர்க்கையாக அல்ல. இப்போது அஷ்ட புஜ துர்கை சந்நிதி உள்ளது. அருகில், கைலாசநாதர், பார்வதி.

பிரகாரத்தில், ஓர் உயரமான லிங்க வடிவம் உள்ளது. லிங்கம் என்றால், பாணம் மட்டும் உள்ளது. ஆவுடையார் இல்லாமல். அதன் முன்பு, சிறிய நந்தி, அதன் வலப்புறம் திரும்பிப்பார்த்தவாறு. இவற்றின் வரலாறு, மகத்துவம் தெரியவில்லை. பூசைகளற்று தனியே இருக்கும் இந்த பாணம், கோவிலுக்கு வருபவர்கள் எண்ணெய் ஊற்ற மட்டுமே உள்ளது. ஆனால் அதன் அழகு வெகுவாக ஈர்க்கிறது.














பிரகாரம் சுற்றிவந்தபின், யாரிடமேனும் வரலாறு அறியலாம் என்றெண்ணி, ஓரு முதியவரிடம் பேசினேன். அவர் அறிந்தவரை, அந்த பாணமே ஆரம்ப காலத்தில், அதாவது, தஞ்சை பெரிய கோவில் கட்டி முடித்த பின்பு, கிருஷ்ணன்ராமன் பிரம்மராயர் இக்கோவில் கட்டுகையில் நிர்மாணித்தது என்றார். ஆவுடையார் இருந்ததா? நிர்மாணிக்கும் முன் ஏதேனும் காரணங்களால் கைவிடப்பட்டதா? இல்லை வேற்று படை எடுப்பில் சிதிலமானதா? தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன், காஞ்சி மடாதிபதி(எந்த வருடமென்று முதியவருக்கு நினைவில்லை. அவரின் சிறு வயது எனக் கூறினார்) இங்கு வந்த போது, இருக்கும் இந்தப் பெரிய பாணத்திற்கு இந்த கோபுரத்தின் அளவு குறைவாக உள்ளது என்றாராம்(காரணம் தெரியவில்லை). எனவே, அவரின் காலத்தில், புதிதாக ஒரு லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு, குடமுழுக்கு நடந்துள்ளது. அதுவே இப்போதுள்ள மூலவர் என முதியவர் தகவலளித்தார்.

இந்தச் செய்தி எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், உண்மையாக இருக்கும் பட்சத்தில், பிரகாரத்தில் பராமரிப்பு அற்றுக் கிடப்பது வேதனையே.

முகவுரையில் பாலகுமாரன் எழுதியிருப்பார், அம்மன்குடி அமானுஷ்யங்கள் நிறைந்தது என. அப்படிப்பட்ட பழமையான கோவில் கட்டுமானம் தற்காலக் கோவில் போல் காட்சியளிக்கிறது இப்போது. குடமுழுக்குக்குப்பின், அன்றாடப் பராமரிப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.

இன்னும், அந்தச் சிறிய நந்தி என் கண்களை விட்டு அகலவில்லை.

வேறொரு சந்தர்ப்பம் கிடைக்கையில் இராஜ இராஜன் காலத்து இடங்கள் சில சென்று, அப்பதிவுகளில் சந்திப்போம்.